பக்கம்:மாணவர்களுக்கு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம்

11

கின்றன. இல்லாவிட்டால் அவை அடிபட்டு நின்று விடுகின்றன. மாணவர்தம் ஆற்றலை- அவ்வாற்றல் தவறாகப் பயன்படும் விதத்தை நகைச்சுவை மிளிரக் குறிப்பிட்டுள்ள அழகே அழகு! (ப. 8) "நெற்கதிர்களைத் தேய்த்து உமியை ஊதிவிட்டால் அரிசிகள் காணப்படவேண்டும். எழுத்துக்களைப் படித்து நீக்கிவிட்டால், கருத்துக்கள் காணப்பட வேண்டும். இன்றேல் நெற்பதரைப் போல இதுவும் பதராகிவிடும்” (ப. 25) என்று தாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும் உவமைச் சிறப்புணர்க. இவ்வாறு கி.ஆ.பெ. அவர்களின் பேச்சில் பன்னூற் புலமை, உவமை நலம், நகைச்சுவை உணர்வு, புள்ளி விவரக்குறிப்பு முதலியன பொதுளக் காணலாம்.

மாணவர் தமிழுணர்வொடு நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டு, குன்றா ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடையவராய் வாழ்ந்து சிறக்க வழிகாட்டும் இம்மூதறிஞர் வழிநின்று தமிழகம் சிறப்பதாக!

சென்னை
அன்புள்ள,
வெ. தெ. மாணிக்கம்
23-2-88