பக்கம்:மாணவர்களுக்கு.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம்

17

இலக்கியம்

இன்று இங்கு இலக்கிய விழா. இலக்கியம் என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உலகில் பல மொழிகளுக்கு இலக்கியங்கள் உள்ளன.அவை அனைத்தும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், நம் தமிழ்ச்சான்றோர் கண்ட இலக்கியங்கள் அத்தனை : |ம் ஒழுக்க த்தையே அடிப்படை யாகக் கொண்டவை . உலகில் நூல் நிலையங்கள் பல. அவற்றுள் முதல் நூல் நிலையத்தைத் தொடங்கி வைத்த நாடு ரோமாபுரி, ரோம் நகரில் உள்ள பாதிரிமார்கள்தான் முதன்முதலில் நூல் நிலையத்தை அமைத்தார்கள். பல ஆண்டுகளுக்குப் பின்னர், இங்கிலாந்து அதைப் பெரிதாக்கிப் பெருமை பெற்றது. கடந்த சில ஆண்டுகள்வரை அமெரிக்கா நூல் நிலையத்தி லேயே ஒரு பெரிய அரசனாக விளங்கியது. இன்று இரஷ்யா ஒன்றுதான் நூல் நிலையத்தில் ஒரு சக்கரவர்த்தியாகக் காட்சி யளிக்கிறது. அங்குள்ள நூல் நிலையத்தில் இருக்கும் புத்தகங் களை நீளமாக அடுக்கி வைத்தால் 36,000 மைல் நீளம் வரும். உலகத்தை ஒரு சுற்றுச் சுற்றினால் 24, 000 மைல்கள். அங்குள்ள நூல்களின் நீளம் ஒன்றரை உலகத்தின் நீளம். அங்கு உள்ள ஒரு படிப்பகத்தின் அறையில் 500 பேர்கள் தங்கியிருந்து படிக்கலாம். 500 பேசைகள், 500 நாற்காலிகள். மேசைகளையும், நாற்காலிகளையும் எடுத்துவிட்டால் 1,500 பேர் உட்கார்ந்து படிக்கக்கூடிய அளவில் உள்ளது அப் படிப்பகம் இத்தகைய படிப்பக அறைகள் 51. அந் நூல் நிலையத்தைச் சுற்றி இருக்கின்ற்ன என்றால், உங்கள் உள்ளத்தில் சிறிது நினைத்துப் பாருங்கள். அது எவ்வளவு பெரிய நூல் நிலையம் என்று. மா —2