பக்கம்:மாணவர்களுக்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம்

19


திரிகடுகம், நான்மணிக் கடிகை, நாலடியார், திருக்குறள் முதலியன. அரை ருபாயிலிருந்து ஐந்து ருபாய் வரை எத்தனையோ இலக்கியங்கள் நம்மிடையே உள்ளன. இவை அனைத்தும் நம் மொழியில் உள்ள இலக்கியங்கள். இவையத்தன்னயும் ஒழுக்கம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டவை. இவற்றைச் செய்தவர்கள் தமிழ்ச் சான்றோர் கள். மக்கட்கு எது தேவையில்லை என்றாலும் 'ஒழுக்கம் தேவை' என்பது அவர்களது முடிவு. இதனாலேயே தமிழ் இலக்கியங்கள் பிறமொழி அறிஞர்களால் பாராட்டப்பெற்று வருகின்றன.

மனிதன் ஒழுக்கத்தினால் தான் உயர்வடைகிறான். ஒழுக்கத்தை உயர்த்துவதற்காகத்தான் தமிழ் இலக்கியங்கள் தோன்றித் துணை செய்கின்றன. இதைக் கற்றுக் கொள்ளத் தான் நீங்கள் இந்த இலக்கிய விழாவில் கலந்து கொள்கிறீர் கள். ஆகவே நீங்கள் இலக்கியங்களைப் படித்துப் பயன் படுத்திக் கொள்வது நல்லது

எதிர்காலத் தலைவர்கள்

கல்லூரிகளுக்கு வந்து சொற்பொழிவாற்றும் அறிஞர்கள் மாணவர்களை நோக்கி, நீங்கள் எதிர்காலத் தலைவர்கள், நீங்கள் எதிர்காலத் தலைவர்கள்' என்று கூறி வருகிறார்கள். இது தவறு. இதை நான் ஏற்றுக் கொள்வதில்லை.

உண்மையாகக் கூற வேண்டுமானால் நீங்கள் இக்காலத் தலைவர்கள். இப்போதே தலைவர்கள் என்று கூறியாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/18&oldid=1261073" இலிருந்து மீள்விக்கப்பட்டது