பக்கம்:மாணவர்களுக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மாணவர்களுக்கு


ஏனெனில் நீங்கள் கைப்பிடியைப் பிடித்து இழுத்தால் தான் இரயில் நிற்கிறது. தண்டனையும் இல்லை. நாங்கள் இழுத்தால் இரயில் நிற்க மறுக்கிறது. நின்றாலும் அபராதம் கட்ட வேண்டியிருக்கிறது,

நீங்கள் நினைத்தால்தான் சாலைகளில் பேருந்துகள் ஓடுகின்றன. இல்லாவிட்டால் அவை அடிபட்டு நின்று விடுகின்றன.

நீங்கள் நினைத்தால் கல்லூரிகள் மூடுகின்றன. நினைத்தால்தான் திறக்கின்றன.

இத்தகைய ஆற்றல் படைத்த இக்காலத் தலைவர்களாகிய உங்களை, எதிர்காலத் தலைவர்கள் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது.

ஆகவே, இப்போதே தலைவர்களாகிவிட்ட உங்களுக்கு சில பொறுப்புகள் வந்து விடுகின்றன. அவை பொறுமை, கட்டுப்பாடு, சிந்தனை, ஒழுக்கம் முதலியன. இவைகளை நீங்கள் இப்போதே ஏற்றுக்கொள்வதுதான் நல்லது.

அரசியலில் தலையிடுதல்

"மாணவர்கள் அரசியலில் தலையிடலாமா?" என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். இது என்ன கேள்வி?

எத்தனையோ கலைகளைக் கற்று வருகின்ற மாணவர்கள் அரசியலையும் கற்றுக் கொள்வதால் என்ன தவறு? நன்றாகக் கற்று, அறிந்து கொள்ளலாம்.

ஆனால் செயற்படக்கூடாது. அரசியலில் தலையை இட்டால் காலைக் கல்லூரியிலிருந்து எடுத்துவிட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/19&oldid=1425376" இலிருந்து மீள்விக்கப்பட்டது