பக்கம்:மாணவர்களுக்கு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ.விசுவநாதம்

21

அரசியலில் தலையையும், கல்லூரியில் காலையும் வைத்துக் கொண்டு நடப்பது மாணவர்க்கு மட்டும் கேடு பயப்பதல்ல, நாட்டுக்கும் வீட்டுக்குமே கேடு பயப்பதாக முடிந்துவிடும்.

மற்போர் செய்கின்றவர்கள் உடலில் நல்ல வலுவை ஏற்றிக் கொண்ட பிறகே போருக்குச் செல்வதுபோல, கல்லூரியில் நன்கு படித்து முடித்து அறிவும் ஆற்றலும் பெற்ற பிறகே அரசியலில் தலையிடுவது. பொருத்தமாக இருக்கும். அதை விட்டுவிட்டு கல்லூரியில் அரைகுறையாகப் படித்து விட்டு அரசியலில் புகுந்து கொண்டு ஆர்ப்பாட்டமும் போர்ப்பாட்டமும் பாடுவது நாட்டுக்கும் வீட்டுக்கும் நமக்கும் நலந்தராது.

தமிழ் மக்கள் கண்டவை

தமிழ்ச் சான்றோர்கள் எதனையும் துருவி. ஆராய்ந்து கண்டெடுத்து அவற்றைத் தொகைப்படுத்தி, வகைப்படுத்தி, பெயர்ப்படுத்தி, செயல்படுத்தியவர்கள். எடுத்துக்காட்டாக இசையை ஏழாகக் கண்டார்கள். குரல், துத்தம், கைக்கிளை, இழி, உழை, விளரி, தாரம் எனக் கண்டு 5000 ஆண்டுகளாயின. எட்டாவது இசையை உலகின் ஐந்துகண்டங்களிலுமுள்ள 200க்கும் மேற்பட்ட மொழியினர் எவரும் இதுவரை காணவில்லை,

இசையை ஏழாகக் கண்டவர்கள் தான் சுவையை ஆறாகக் கண்டார்கள். இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு. உப்பு, உவர்ப்பு என, இன்றைக்கு இவ்வுலக மக்களின் எண்ணிக்கை