பக்கம்:மாணவர்களுக்கு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

23

இது ஆற்றின் மூலம் நீரைக் கொண்டு வந்து மருத நிலத்தை வாழ்விக்கும். தெற்கே இருந்து வருகின்ற காற்றுக்கு தென்றல் என்பது பெயர். இது மக்களை வளர்க்கும். வடக்கே இருந்து வருகின்ற காற்றுக்கு வாடை என்று பெயர். இது பயிர்களை வளர்க்கும் எனத் துருவி ஆராய்ந்து கண்டெடுத்துக் கூறியிருக்கின்றனர்.

காற்றை நான்காகக் கண்டவர்கள்தான் மொழியை மூன்றாகக் கண்டார்கள். இன்று உலகில் உள்ள எந்த மொழியும் மூன்றாகவோ, இரண்டாகவோ இல்லை. எல்லாம் ஒன்றாகவே இருந்து வருகிறது. தமிழ் மொழியை மட்டும் மூன்றாகக் கண்டார்கள். இயல், இசை, நாடகம் என. இது எண்ணம், துணிவு, செயல் எனப் பொருள்படும். மக்கள் எக்காரியத்தையும் முதலில் எண்ணி, பிறகு துணிந்து, அடுத்து செயல்படுத்துவது இயல்பு. இதுவே இயல், இசை, நாடகம் எனப்பெறும். இயற்றமிழ்ப் புலவர்களெல்லாம் இலக்கியங்கள் மூலம் எண்ணத்தை வளர்த்தார்கள். இசைத்தமிழ்ப் புலவர்களெல்லாம் உள்ளத்தை உருக்கித் துணிவு பெறச்செய்தார்கள். நாடகத்தமிழ்ப் புலவர்களெல்லாம் நடத்திக் காட்டி மக்களை நல்வழிப்படுத்தினார்கள். இவையே முத்தமிழாயிற்று. இன்னும் ஒரு விளக்கம்.

ஒரு நாட்டினுடைய உறுப்புகள்தான் மனிதனுடைய உறுப்புகள். நாட்டின் உறுப்பு வேறு. மனிதனின் உறுப்பு வேறு என எண்ண வேண்டாம். நாடே மக்கள், மக்களே நாடு. இந்த ஒற்றுமையைப் பாருங்கள். தலை முடியே காடு. அவற்றில் உள்ள ஈறும், பேனும் விலங்குகள். நெற்றி சமயம். கண்கன் கல்வி, மூக்கு சுகாதாரம், வாய் பத்திரிக்கைகள், பற்கள் ஆலைகள், கழுத்து பாதுகாப்பு, கைகள் தொழிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/22&oldid=1267695" இலிருந்து மீள்விக்கப்பட்டது