பக்கம்:மாணவர்களுக்கு.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

மாணவர்களுக்கு

சாலைகள், கால்கள் போக்கு வரத்து, வயிறு விவசாயம், முதுகெலும்பு வர்த்தகம், நெஞ்சு பண்பாடு, ஒரு தனி மனிதனுடைய பண்பாடுதான் ஒரு நாட்டினுடைய பண்பாடாக அமையும். ஒரு மனிதனுடைய ஒழுக்கம்தான் அவன் வாழும் நாட்டின் ஒழுக்கமாக அமையும்.

ஜப்பான் என்று எடுத்துக் கொண்டால், அந்த நாட்டினுடைய பண்பாடும் ஒழுக்கமும் அந்த நாட்டு மக்களையும் சேர்ந்ததாகவே காணப்படும். இதற்கு மேல் இப்போது நான் ஒன்று கூறுகிறேன். இந்த எண்சாண் உடம்புக்கும் தலையே தலைமை. இதில் கண், காது, வாய் என மூன்று உறுப்புகள் உள்ளன. இம் மூன்றுக்கும் உரியதே முத்தமிழ், இயற்றமிழ், படிப்பது- வாய்க்கு. இசைத்தமிழ் கேட்பது-காதுக்கு. நாடகத் தமிழ் பார்ப்பது-கண்ணுக்கு, நாம் பெற்ற இந்த மூன்று உறுப்புகளையும் வீணாக்கி விடக் கூடாது என்றே மூன்றுக்கும் மூன்று தமிழை வைத்தார்கள். ஆனால் நாமோ கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் வாழ்ந்து வருகிறோம். இது நான் கூறுவது அல்ல. "ஊமையராய், குருடர்களாய், செவிடர்களாய் வாழ்கின்றோம் ஒரு சொல் கேளிர் சேமமுற வேண்டுமெனில், தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்” என்று அழுது அழுது கூறியவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார். இந்த உறுப்புக்கள் மூன்றையும் பாழாக்கி விடாமல் நன்கு பயன்படுத்தி முத்தமிழையும் வளர்க்க வேண்டுமென இந் நேரத்தில் நான் உங்களுக்கு வற்புறுத்திக் கூறுகிறேன்.

மொழியை மூன்றாகக் கண்டவர்கள் தான், இலக்கணத்தை இரண்டாகக் கண்டார்கள், கண்ணால் காணப்