பக்கம்:மாணவர்களுக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

25

படுகின்ற பொருள்களுக் கெல்லாம் ஒரு இலக்கணம், 'புறம்', மனத்தால் நினைக்கப்படுகின்ற பொருள்களுக் கெல்லாம் ஒரு இலக்கணம் 'அகம்' என, உலகின் எந்த மொழியிலும், வடமொழியிலும், ஆங்கிலத்திலும்கூட இலக்கணத்தை இரண்டாகக் காணமுடியவில்லை. இதை எண்ணிப் பெருமையடைய தமிழுக்கு, தமிழர்க்கு, தமிழகத்துக்கு மட்டுமே உரிமை உண்டு.

இசையை ஏழாக, சுவையை ஆறாக, நிலத்தை ஐந்தாக, காற்றை நான்காக, மொழியை மூன்றாக, இலக்கணத்தை இரண்டாகக் கண்ட தமிழ்ச் சான்றோர் தான் ஒழுக்கத்தை ஒன்றாகவே கண்டு மனிதனோடு சேர்த்து இணைத்து விட்டார்கள். 'திணை' என்றால் ஒழுக்கம். மக்கள் 'உயர் திணை' ஒழுக்கம் உள்ளவர். நாய், பன்றி முதலியன அஃறிணை, ஒழுக்கமற்றவை என்பது பொருள். அதுமட்டுமல்ல உலகில் உள்ள மக்களெல்லாம் ஒரே குலம். அவர்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒரே தெய்வம் என 3000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்” எனக் கூறியவர் தமிழ்ச்சான்றோர் திருமூலர்.


உயர்ந்த கருத்துக்கள்

உலக மொழி அறிஞர்கள் இன்றைக்கும் கண்டு கூறாத சிறந்த கருத்துக்கள் பலவற்றை 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் அறிஞர்கள் கண்டு கூறியிருக்கிறார்கள. அவற்றுள் சில:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/24&oldid=1267719" இலிருந்து மீள்விக்கப்பட்டது