பக்கம்:மாணவர்களுக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உ. சான்றோர் பழிக்கும் வினை

பெற்ற தாயின் வயிறு பசிக்கக் காண்பது பிறந்த மகனுக்கு இழிவு, ஏனெனில் அவன் குடியிருந்த கோயில் அது. அவனைப் பத்து மாதம் சுமந்திருந்த வயிறு அது. ஆகவே எப்பாடு பட்டாகிலும் பெற்ற தாயின் வயிறைப் பசிக்க விடாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், அந்த நிலையிலும், திருடியோ, பிறரை ஏமாற்றியோ, சூதாடியோ பொருள் தேடிவந்து தாயின் பசியைப் போக்கக் கூடாது. ஏனெனில் அச்செயலைச் சான்றோர் பழிப்பர் என்று திருக்குறள் கூறுகிறது. எவ்வளவு உயர்ந்த கருத்து,

"ஈன்றாள் பசிகாண் பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை."

ஊ. பெற்ற தாயும் சான்றோரும்

தன் மகன் என்ன குற்றம் செய்தாலும் பெற்ற தாய் அவனை வெறுக்க மாட்டாளாம். ஒரு சிறு குற்றம் செய்தாலும் சான்றோர்கள் அவனை வெறுத்து விடுவார்களாம். சூதாடத்தான் காசு கேட்கிறான் என்று தெரிந்தாலும்: அவன் விரைவில் திருந்தி விடுவான். என்று எண்ணிக் காசும் கொடுத்து, புத்தியும் கூறி அனுப்புவாளாம் தாய். பல நாள் கொடுப்பாளாம். ஒரு நாள் கையில் இல்லாதபொழுது, 'இல்லை' என்பாளாம். மகன் ஓங்கி அறைவானாம். பல் உதிர்ந்து வாயில் இருந்து இரத்தம் கொட்டுமாம். "அடப்பாவிப் பயலே, ஏண்டா என்னை அடிக்கிறாய்?.” என்னுமாம் அவள் வாய், ஆனால் அவள் உள்ளம், 'தான் பெற்ற மகனுக்கு எவ்வளவு வலுவிருக்கிறது!’ என்று எண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/29&oldid=1268668" இலிருந்து மீள்விக்கப்பட்டது