பக்கம்:மாணவர்களுக்கு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மாணவர்களுக்கு

ஒன்றினால்தான் மேன்மையடைய முடியும் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. ஆம். ஒழுக்கத்தை இழந்தவன் எவ்வளவு படித்தாலும், எத்தகைய பட்டம் பெற்றாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு பணம் பெற்றிருந்தாலும் என்ன பயன்?

உயிரைக் காப்பாற்றுவதில் நாம் அனைவரும் அதிகக் கவலை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதை விட ஒழுக்கத்தைக் காப்பாற்றுவதில் அதிகமாகக் கவலை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. இதை அவர்.

"ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்" என்று அரைக் குறளால் கூறுகிறார்.

ஒழுக்கத்தை இழந்தவன் எவராலும் மதிக்கப் படான். அவன் இகழப்படுபவன். அது மட்டுமல்ல. அவன் அடைய வேண்டாத பழியையும் அடைய வேண்டி நேரிட்டுவிடும். என்று வள்ளுவர் எச்சரிக்கை செய்கிறார். இழுக்கத்தின் எய்துவர் பழி என்று கூறவில்லை. 'இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி' என்பதே அவர் வாக்கு. இதனால், ஒழுக்கம் தவறியவன் தான் செய்யாது, பிறர் செய்த பழியையும் ஏற்க வேண்டி வரும் எனத் தெரிய வருகிறது,

பைபிளில், பத்துக் கட்டளைகள் இருப்பது போலத் திருக்குறளில் பத்துக் கட்டளைகள் இருக்கின்றன. இவை பத்தும் ஒழுக்கத்தைப் பெறத் துணை செய்வன. அவை,

பொய்யைச் சொல்லாதே, புலாலை உண்ணாதே
கள்ளைக் குடியாதே, களவை நினையாதே
காமம் கொள்ளாதே, கொலையைச் செய்யாதே
சூதை விரும்பாதே, சிற்றினம் சேராதே
புறங் கூறாதே, பொறாமை யடையாதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/31&oldid=1268677" இலிருந்து மீள்விக்கப்பட்டது