பக்கம்:மாணவர்களுக்கு.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

மாணவர்களுக்கு

உலகிலேயே அழகாகவும், திருத்தமாகவும் எழுதுவதில் பிரெஞ்சு நாடு முன்னணியில் நிற்கிறது. ஆங்கு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மாணாக்கர்களின் கையெழுத்துக்களில் அதிகக் கருத்தைச் செலுத்துகிறார்கள். ஆங்கில ஆசிரியர்கள் அவ்வாறு மாணவர்களின் எழுத்துக்களில் கருத்தைச் செலுத்துவதில்லை. இதனால் சிலருடைய ஆங்கில எழுத்துக்கள் எழுதியவர்களாலேயே பின்னால் படிக்க முடியாமல் போய்விடுகிறது. இது தவறு.

என் தந்தையார் என்னுடைய தொடக்க கால எழுத்துக்களைச் சரியாகத் திருத்துவதில் அதிக நேரம் எடுத்துக்கொள்வார்கள். அது மட்டுமல்ல, அவர் ஒரு பாடலை அடிக்கடி கூறி என்ளை எச்சரிப்பதும் உண்டு. அப்பாடல் :

கொம்பு சுழி கோணாமல் கொண்ட கோல் சாயாமல்
அம்புபோல் கால்கள் அசையாமல்-தம்பி நீ
எழுதினால் வாழ்வுண்டு புகழுமுண்டு,
இன்றேல் உனக்கு எதுவுமில்லை
.

என்பது. இப்பாடலை நீங்கள் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

ஒ. எழுத்தாளனாக

தம்பி! நீ முயன்றால் எழுத்தாளனாகவும் ஆகலாம் கல்லெல்லாம் மாணிக்கக் கல்லல்ல என்பதையும், மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பதையும் நீ அறிந்திருக்கலாம். அதுபோல எழுதுவதெல்லாம் எழுத்தல்ல என்பதையும் நீ அறிந்திருக்க வேண்டும்.