பக்கம்:மாணவர்களுக்கு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

மாணவர்களுக்கு

பேசுவது போல எழுதுவது தவறு. அவ்வாறுதான் எழுதவேண்டும் என்பது ஒரு தவறான கருத்து. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்கள் ஒவ்வொரு வகையாகப் பேசுகிறார்கள். அதிலும் ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு வகையாகப் பேசி வருகின்றனர். 'இவர்களில் யார் பேசுவது போல?' எனக் கேட்டால், விடையே வராது. பேக்சுக்கலை வேறு; எழுத்துக்கலை வேறு. இரண்டும் ஒன்றாக வேண்டும் என விரும்புகிறவர்கள் பேசுவதைப்போல எழுதுங்கள் எனக் கூறாமல் எழுதுவதைப்போல பேசுங்கள் எனக் கூறுவது தலமாகும்.

பேசுவதுபோல எழுதுகிறவன், எழுத்தாளி ஆகான்.

பிழைப்ட எழுதுகிறவன். படிப்பாளி ஆகான்.
வைது எழுதுகிறவன், அறிவாளி ஆகான்.

வாழ்த்தி எழுதி வாழ்பவன், வாழத் தெரியாதவன்.

காதற் கதைகளை எழுதுபவன், காலத்தின் அருமையை அறியாதவன்.

காமக் கதைகளை எழுதுபவன் தியொழுக்கத்தை வளர்ப்பவன்.

பலமொழிச் சொற்களை கலந்து, எழுதுபவன், ஒரு மொழியிலும் பற்று இல்லாதவன்.

பெருந்தன்மையோடு பழகியறியாதவன், 'பேனா'வோடு பழகத்தகாதவன்.

இவையனைத்தையும் ஏற்கமுடியாத எழுத்தாளன் இறுதிச் கருத்தையாவது ஏற்றுக்கொண்டாக வேண்டும். இன்றேல் அவன் ஒரு சிறந்த எழுத்தாளனாக உயர முடியாது.