பக்கம்:மாணவர்களுக்கு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

39

நீ எழுதும் கட்டுரையின் தலைப்பை முதலில் விளக்கி, பிறகு எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என ஒரு ஒழுங்கு முறைப்படுத்தி எழுதுதல் வேண்டும். இடையிடையே மேற்கோளும் காட்டுவது நல்லது. தேவையான இடங்களில் சிறிது நகைச்சுவையும் புகுத்தி எழுதலாம்!

எழுதும் கட்டுரைகள் யாவும் ஒரு குறிக்கோளை உடையதாக இருக்க வேண்டும். தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் ஒவ்வொரு குறிக்கோளை உடையவை. குறிக்கோள் இல்லாத வாழ்வும், குறிக்கோள் இல்லாத எழுத்தும் பயனற்றவை.

'எங்குச் செல்கிறோம்' என்று எண்ணாமலேயே சாலையில் நடந்து கொண்டிருப்பவனும், 'எதை எழுதுகிறோம்' என்று எண்ணாமலேயே எழுதிக் கொண்டிருப்பவனும் ஒரே படகில் செல்ல வேண்டியவர்கள்.

மகாராஜ ராஜ ஸ்திரி, விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை, வதூவர்கள் என்பவைகளெல்லாம் மறைந்து, திருவாளர், திருமண அழைப்பு, மணமக்கள் என்பனவெல்லாம் வெளிவந்த பிறகும், அக்கிராசனாதிபதி, பிரசங்கி,வந்தனோபசாரம் என்பவைகளெல்லாம் ஒழிந்து, தலைவர், சொற்பொழிவாளர், நன்றிகூறல் ஆகியவை வழக்கத்திற்கு வந்துவிட்ட இக்காலத்திலும்கூடப்'பறவை' இருக்கப் 'பக்ஷி'தியையும், 'பூ' இருக்கப் புஷ்பத்தையும் தேடிப்பிடித்து எழுதுவது எதன் பொருட்டோ?

"மன்னன் தன் தோள்களில் மலர் மாலைகளையணிந்து பல்லக்கு ஏறி ஊர்வலம் வந்தான்" என்பதை ஒருவர் "ராஜன் தன் புஜங்களில் புஷ்பகாரங்களைக் குடிக்கொண்டு ரதம் ஏறிப் பவனி வந்தான்” என எழுதியிருந்தார். ஒரு திருமணப்பத்திரிக்கையில், "தாங்கள் உற்றார், உறவினருடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/38&oldid=1271681" இலிருந்து மீள்விக்கப்பட்டது