பக்கம்:மாணவர்களுக்கு.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மாணவர்களுக்கு

வந்திருந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறேன்” என்பதை, ஒருவர். "தாங்கள் இஷ்ட மித்ர பந்து ஜன சமேதராக விஜயம் செய்து வதூவரர்களை ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன்" என்று எழுதியிருந்தார். இவற்றுள் எது தமிழ்?

"சோறு, தண்ணீர் என்பதை கானா, பாணி என்றோ, ரைஸ், வாட்டர் என்றோ, போஜனம், தீர்த்தம்” என்றோ பிறர் எழுதலாம். ஆனால் அதைத் தமிழன் எழுதலாமா? எழுதினாலும் அதை 'தமிழ்' எனலாமா? என்பவைகளைப் பிறர் எண்ணிப் பார்க்காவிட்டாலும், எழுத்தாளன் எண்ணிப் பார்க்க வேண்டும்.

"பழமொழிச் சொற்களைக் கலந்து எழுத்தினால்தான் ஒரு மொழிவளரும்" என்பது, "கல்லையும் மணலையும் கலந்தால்தான் அரிசி கூடும்" என்பதைப் போன்றது. அரிசியும், சீரகமும் உணவுப் பொருட்களே. எனினும் அவை தனித்தனியே இருக்கும்போதுதான் அரிசிக்கும் மதிப்பு, சீரகத்துக்கும் சிறப்பு. இரண்டும் கலந்துவிடுமானால் இரண்டுமே பாழாகிவிடும்.

"அட்ஹாக் கமிட்டி, லோக்சபா, ஆகாசவாணி, விவித்பாரதி” ஆகியவைகளெல்லாம் புரியும் போது, தமிழ்ச்சொற்கள் தமிழனுக்குப் புரியாது எனக் கூறுவது தமிழுக்கும், தமிழனுக்கும் மானக்கேடாகும். யாராவது ஒருவர் தமிழ்ச் சொல் தனக்குப் புரியவில்லை என்றால் அவர் தமிழ் படிக்கவில்லை என்று பொருள். தமிழ்ச்சொற்கள் அவருக்குப் புரிய வேண்டுமானால் அதற்குரிய ஒரே வழி அவர் தமிழைப் படிக்கவேண்டும் என்பதுதான். அதை விட்டுவிட்டு தமிழ் படிக்காத மக்களுக்குப் புரியும்படி எழுதுகிறேன் என