பக்கம்:மாணவர்களுக்கு.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுமுன்னுரை

காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சென்ற ஆண்டு நடத்திய இலக்கியவிழாவில் பேசிய பேச்சு இது. பிற பள்ளிகளில் பேசிய பேச்சின் குறிப்புகளும் இதில் சேர்க்கப்பெற்றுள்ளன.

சென்ற சில ஆண்டுகளுக்குமுன், திருச்சி புனித சிலுவை கல்லூரி ஆண்டுவிழாவில் பேசிய பேச்சின் குறிப்புகளும் இந்நூலில் மாணவியருக்கு’ என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளன.

ஒழுக்கக் கேடுகளை வெளியிடும் திரைப்படங்களைப் பார்த்தும், ஒழுக்கக்கேடுகளை எழுதும் சில கிழமை இதழ்களைப் படித்தும் கெடுகின்ற மாணாக்கர்களில், சிலரேனும் இந்நூலைப் படித்துத் திருந்துவார்களாயின் மகிழ்வேன்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள், இந்த ஒருமணி நேரப் பேச்சை ஒலிப்பதிவு செய்து கொடுத்து, நூலாக வெளியிட விரும்பி வேண்டியதால் இந்நூல் வெளிவருகிறது. இதற்காக அவரது அன்பிற்கும். அருந்தொண்டுக்கும் என் நன்றியையும் வணக்கத்தையும் கூறுகிறேன்.

என்னுடைய 23 நூல்களையும் வெளியிட்டு, இந்நூலை இருபத்து நான்காவதாக வெளியிட்டு மகிழ்கின்ற சென்னை பாரி நிலையத்தாருக்கும், இதனை அழகுற அச்சிட்டு உதவிய கவின்கலை அச்சகததாருக்கும், இதனைப் படித்துப் பயன் பெறுகின்ற மாணவ மாணவியர்க்கும் பிறர்க்கும் என் நன்றியும், வணக்கமும் உரியதாகட்டும்.

தங்களன்பிற்குரிய
கி.ஆ.பெ. விசுவநாதம்