பக்கம்:மாணவர்களுக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

41

எழுதுவது ஒரு புதிய கதம்ப மொழியை உருவாக்க உதவுமேயன்றி தமிழை வளர்க்க உதவாது.

நல்ல தமிழில் எழுதினாலும் அதையும் வளரவிடாமல் அழித்து ஒழிக்கும் நச்சுப் பூச்சிகள் இரண்டு இருக்கின்றன. அவை இலக்கணப் பிழையும், அச்சுப் பிழையும் ஆகும். வளரும் பயிராக இருக்கும் எழுத்தாளர்கள் இப்பூச்சிகளால் தாக்கப்படாமல் இருப்பது நலமாகும்.

மக்களைத் திருத்த எழுத்துத் துறையே தலை சிறந்தது. இதையறிந்தே அறிஞர் வால்டேர், "வாள் முனையைவிடப் பேனா முனையே அதிக வலிமையுடையது" என்றார். எனினும் ஒழுக்கமற்றவனுடைய வாளோ, பேனாவோ வெற்றி பெறாது. வெற்றி பெற்றாலும் அது நிலைத்து நில்லாது. ஆகவே, "ஒழுக்கமுள்ளவனுடைய எழுத்துக்கு ஒரு தனி எடையுண்டு” என்பதை எழுத்தாளர்கள் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். அடுத்து தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதன் பிறகே பிறரைத் திருத்த முனைய வேண்டும். தன்னையே திருத்திக் கொள்ள முடியாத ஒருவனால் தாட்டையோ, மக்களையோ, சமூகத்தையோ திருத்திவிட முடியாது.

"ஆமை" புகுந்த விடும் அமீனா புகுந்த விடும் பாழாகி விடும்” என்பது நம் நாட்டுப் பழமொழி. அமீனா புகுந்த வீட்டைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆமை, பாம்பைப் போல நச்சுத்தன்மை கொண்ட ஒரு உயிரினம் அல்ல. இது புகுந்த வீடு எப்படி பாழாகிவிடும் என்பது ஒரு கேள்வி, ஆமை என்றதும் பலர் கிணற்றாமையை எண்ணுகிறார்கள். இது கிணற்றாமையும் அல்ல, குளத்தாமையுமல்ல. ஆற்றாமையாகும். எந்த ஆறு? அது விண்ணாறுமல்ல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/40&oldid=1271687" இலிருந்து மீள்விக்கப்பட்டது