பக்கம்:மாணவர்களுக்கு.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மாணவர்களுக்கு

வெட்டாறுமல்ல, அழுக்காறு. மற்ற ஆற்றின் இரு கரைகளிலும் கோட்டுப்பூவும், கொடிப்பூவும் பூக்கும். இந்த ஆற்றின் கரைகளில் 'எரிப்பு' ஒன்று மட்டுமே பூக்கும். ஆற்றாமை, அழுக்காறு, எரிப்பு என்பன 'பொறாமை' என்பதையே குறிக்கும். இது புகுந்தால் வீடும், நாடும் மட்டுமல்ல, எழுத்தும் பாழாகிவிடும். ஆகவே எழுத்தாளன் தன்னுள்ளத்இல் இந்த ஆமை புகுந்துவிட இடங்கொடாமல் எச்சரிக்கையாயிருப்பது நல்லது.

சில எழுத்தாளர்கள் வேண்டியவர்களைப் புகழ்ந்தும், உயர்த்தியும், வேண்டாதவர்களை இகழ்ந்தும் தாழ்த்தியும் எழுதி வழிகிறார்கள். இவர்கள், எழுத்துலகிற்குத் தேவையில்லாதவர்கள். உண்மையை ஒழிக்காமல், மறைக்காமல், தீமையற்ற சொற்களால் அச்சமற்று எழுதும் எழுத்தாளர்களே அனைவராலும் வரவேற்கப்படுவர்.

"இன்ன நூலைப் படித்து நட" எனக் கூறுவதற்குத் தகுந்த நூல்கள் பல இப்போது தோன்றி வருகின்றன. இது பெரிதும் பாராட்டத்தக்கது. ஆனால் இது போதாது. "இன்ன ஆசிரியரைப் பார்த்து நட" எனக் கூறுவதற்குத் தகுதியுடைய நூல் ஆசிரியர்கள் பலர் இப்போது தோன்றியாக வேண்டும். இன்றேல் எழுத்துலகம் வாழாது.

நாளிதழ்களுக்கு ஒரு நாளே உயிர். மறுநாள் பிறந்தால் அது இறந்துவிடும். கிழமை இதழ்களுக்கு ஒரு கிழமையும், திங்களிதழ்களுக்கு ஒரு திங்களும் உயிர் உண்டு. ஆண்டு மலருக்கு அடுத்த மலர் பிறக்கும் வரை உயிர் இருக்கும். பிறகு இறந்து விடும். ஒரு நல்ல இலக்கியப் படைப்பு என்றால் அது குறைந்தது அடுத்த