பக்கம்:மாணவர்களுக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

43

தலைமுறை வரையிலாவது உயிர் பெற்றிருக்க வேண்டும். இன்றேல், அது உயிர் இலக்கியம் ஆகாது.

தமிழ்ச் சான்றோர்களால் எழுதப்பெற்ற சிற்றிலக்கியங்களும் பேரிலக்கியங்களும் பல நூற்றாண்டுகளாகி இன்னும் நிலைத்திருப்பதையும், திருவள்ளுவர் செய்த திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளாக, அதாவது நூறு தலைமுறைகளாகி இன்றும் நிலைத்திருப்பதையும், இன்றைய எழுத்தாளர்கள் தங்கள் கருத்தில் கொள்வது நலமாகும்.

அவை இன்றும் நின்று நிலைத்திருப்பது எதன் பொருட்டால் எனில், அவை மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நல்ல வழிகளை அமைத்துக் காட்டிக் கொண்டிருப்பதே எனத் துணிந்து கூறலாம்.

ஆகவே, இன்றைய எழுத்தாளர்கள் நமக்குமுன்னே வாழ்ந்த சான்றோர்களின் வழிமுறைகளைப் பின்பற்றியும், தமிழ்ப்பண்பாடு, தமிழர் பண்பாடு, தமிழகத்துப் பண்பாடு முதலியவைகளைப் பின்பற்றியும் எழுத வேண்டும்.

காமக்கதைகளையும். ஆபாசக்கதைகளையும் எழுதி வருகிற திங்களிதழ்களை வெறுக்கவும், ஒழுக்கக் கேடுகளை வளர்க்கும் திரைப்படங்களை வெறுக்கவும், மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். வெறுப்பதோடு நின்று விடாமல் அவைகளைத் திருத்தவும் முயற்சிப்பது நலமாகும்,

நல்லதை எண்ணி, நல்லதைப் படித்து. நல்வதைக் கேட்டு, நல்லவைகளை எழுதி மக்களுக்கு நல்வழி காட்டும் நல்ல எழுத்தாளர்கள் நமது நாட்டில் பெருகியாக வேண்டும். அவற்றில் நீயும் ஒருவனாகக் காட்சியளிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/42&oldid=1271694" இலிருந்து மீள்விக்கப்பட்டது