பக்கம்:மாணவர்களுக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒள. பேச்சாளனாக...!

தம்பீ! நீ விரும்பினால் ஒரு பேச்சாளனாகவும் ஆகலாம். அதற்கு முதல் தேவை கணிரென்ற குரல் அமைப்பு. இன்று தமிழகத்தில் சிறந்த பேச்சாளர்களாகக் காணப்படுகிற அனைவரும், கணிரென்ற குரலைப் பெற்றிருப்பதையே காணலாம்.

அடுத்து வேண்டியது உணர்ச்சி. நாட்டில் நிகழ்பவைகளை, அரசு நடத்துபவைகளை, சமூகத்தில் நடப்பவைகளைக் கண்டு அறிந்து, எது நல்லது, எது கெட்டது என்ற முடிவுக்கு வர வேண்டும். பின்பு அந்த முடிவில் அழுத்தமாக நம்பிக்கை வைத்து உணர்ச்சியோடு பேச முயல வேண்டும்.

முதல் பேச்சு, ஒரே ஒரு செய்தியை மட்டும் இரண்டு மணித்துளி அளவில் பேசி முடித்து விட வேண்டும். இரண்டாவது பேச்சு இரண்டு செய்திகளை மட்டும் ஐந்து மணித்துளிகளில் பேசி முடித்து விட வேண்டும். மூன்றாவது பேச்சு. மூன்றே மூன்று செய்திகளை மட்டும் பத்து மணித் துளிகளில் பேசி முடித்து விட வேண்டும். பிறகு நாள் ஆக ஆக, சில செய்திகளை மனதில் நினைத்துக் கொண்டு, அவற்றைக் கோர்வையாக பதினைந்து மணித்துளிகளுக்குள் பேசி முடித்து விட வேண்டும். நீ பேசுகிற பேச்சைக் கேட்டவர்கள் இன்னும் கொஞ்சம், பேச மாட்டாயா? என்று நினைக்கிற அளவுக்கு இருத்தல் வேண்டும்.

பேச்சுக்களில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற அமைப்பிலும், இடையிடையே மேற்கோள்களை அமைத்தும் பேசலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/44&oldid=1271702" இலிருந்து மீள்விக்கப்பட்டது