பக்கம்:மாணவர்களுக்கு.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

49

கட்டுங்கள் மருத்துவ மனைகளைக் கட்டுங்கள். சர்ச்சுகளைக் கட்டுங்கள். என்றெல்லாம் ஆலோசனை வந்தது. அதை அவன் ஏற்கவில்லை. அமெரிக்காவில் என்ன இல்லை என்று யோசித்தான். சமூகசேவை (Social Work) இல்லை என்பதை உணர்ந்தான். அதற்காகத் தன் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைக்கத் துணிந்தான். சமூக சேவை பற்றிப் பிரச்சாரம் செய்ய பேராசிரியர்கள் பலர் தேவை என்றும். சம்பளம் அதிகமாகக் கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்தான். அதிக சம்பளத்தைப் பார்த்ததும். 800க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அவ்வேலைக்கு விண்ணப்பம் செய்தார்கள். அத்தனை பேரையும் திறந்த வெளியில் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தான். எல்லோரும் வந்து கூடினார்கள். அவர்களை அழைத்த அக்கோடீஸ்வரன் மேடைமீது ஏறி, "நான் ஒரு மூடன், அமெரிக்காவில் சமூகத் தொண்டே இல்லை என்றும். அது நம் நாட்டுக்குத் தேவை என்றும். நினைத்துத்தான் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தேன். இப்போது பார்த்தால் அது நம் நாட்டில் நிறைய இருக்கிறது என்று தெரிகிறது. சமூகத் தொண்டைப் பற்றி நன்கு அறிந்து உணர்ந்தவர்களும், பிறருக்கு உரைக்கும் ஆற்றல் பெற்றவர்களுமாகிய பேராசிரியர்கள் 800க்கு மேற்பட்டவர்கள் இந் நாட்டில் இருப்பதை நான் அறியாமல் போனேன். இப்போது சமூகத் தொண்டு பற்றி அறிந்துள்ள இத்தனை பேராசிரியர்கள் இருப்பதால், இந்நாடு அழிந்து போய்விடாது என்று தெரிகிறது. தயவுசெய்து நீங்கள், ஊரில் எங்கும் பிரச்சாரம் செய்யப் போச வேண்டாம். உங்களை நீங்களே சீர்திருத்திக் கொள்ளுங்கள். அமெரிக்கா முன்னேறி விடும்" எனக் கூறி இறங்கிப் போய்விட்டான்.


மா-4