பக்கம்:மாணவர்களுக்கு.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளதுமதிப்புரை

[பேராசிரியர் டாக்டர் வெ. தெ. மாணிக்கம்
எம்.ஏ., பிஎச்.டி. தமிழ்த்துறைத் தலைவர்,
பச்சையப்பன் கல்லூரி. சென்னை-30,]

இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்
பைங்கூழ் சிறு காலைச் செய்.’

-அறநெறிச்சாரம்

முனைப்பாடியார் இளமையில் அறம் செய்வதை வலியுறுத்துகிறார். முதிர்ந்த வயதிலும் அறஞ்செய்வதில் முனைந்துள்ளார் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள். இளஞ்சிறார்களைக் கல்வியின் வழியே மாண்புடையவர்களாக ஆக்கும் பருவமே ‘மாணாக்கப் பருவம்’. இன்றைய மாணாக்கன் நாளைய சமுதாயத்தின் தலைவன். ஒரு சமுதாயத்தின் உயர்வும் தாழ்வும் அதன் இளைய தலைமுறையினராகிய மாணாக்கரைச் சார்ந்தே அமைகிறது. எனவே, அவர்கட்குக் கல்வியும், ஒழுக்கமும், மொழிப்பற்றும் ஊட்டி நன்முறையில் உருவாக்க வேண்டியது சான்றோர் கடன். பள்ளிப் பருவத்தின் விளிம்பில் நிற்கும் மாணாக்கர்களிடம் துடிப்பும், வேகமும், அஞ்சா நெஞ்சுடன் செயலாற்றும் திறமும் காணப்பெறும். இதனையே ஓடுகிற பாம்பை மிதிக்கின்ற வயது என்பர். இந்நிலையில் சமுதாயத்தின் நல்லன அல்லன இரண்டுமே அவர்களைக் கவரும். அதிலும் தீய சக்திகளே அவர்களை எளிதில் ஈர்க்கும் இயல்பின. எனவே,