பக்கம்:மாணவர்களுக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

51

மட்டுமல்ல, அக் கூட்டத்தில் இருந்த அனைவருமே வியந்து போனார்கள்.

பிறருக்கு ஆலோசனையும், புத்தியும் கூறும் பேச்சாளர்களுக்கு இதுவும் ஒரு படிப்பினையாக இருக்குமென நம்புகிறேன்.

கோடையிடி இடிப்பதினாலேயே குளம் நிரம்பி விடாது. மழை பொழிந்தால்தான் குளம் நிறையும், இதை மற்றவர்கள் உணராவிட்டாலும், கோடையிடிப் பேச்சாளர்களாவது உணருவது நலமாகும். பேச்சே தேவை என்பதை எனனால் ஒத்துக் கொள்ளமுடியாது. பேச்சும் தேவை என்பதுதான் என் முடிவு. ஆனால் அப்பேச்சு ஒரு செயலை முன்வைத்துப் பேசுவதாய் இருக்கவேண்டும். செயலில்லாத பேச்சு பேச்சேயாகாது. மலையளவு பேசுவதை விட கடுகளவு செய்வது நல்லது என்பது சான்றோர் கருத்து.

ஆகவே, நீயும் பேச்சுக்களைக் குறைத்துச் செயல்களில் இறங்குவது நல்லது.

ஒரு பேராசிரியர் கூறினார். "நான் சொல்லுகிறபடி செய், நான் செய்கிறபடி செய்யாதே" என்று. ஏனெனில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே புலால் மறுத்தல் பற்றி பேசுகிற மக்களையும், கோழிக்குஞ்சு சூப் சாப்பிட்டுக் கொண்டே வள்ளலாருடைய ஜீவகாருண்யம் பற்றி எழுதுகின்ற மக்களையும் கொண்ட நாடு இது.

நீ அவ்வாறு செய்யாதே, செய்யக் கூடியதை மட்டும் சொல், செய்து கொண்டே சொல், நீ மேன்மையடைவாய்.

எழுத்துக்கள் மட்டும் திருத்தமாக இருந்து பயளில்லை. பேச்சும் தெளிவாக இருத்தல் வேண்டும். உள்ளத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/50&oldid=1271742" இலிருந்து மீள்விக்கப்பட்டது