பக்கம்:மாணவர்களுக்கு.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

57

மாணவர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல. அடுத்துள்ள குடும்பங்களிலும் இத்தவறு நடவாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். இன்றேல் தமிழ்மொழி அழியும். தமிழ் இனம் வாழாது. தமிழகமே பாழ்பட்டுப் போய்விடும்.

ஒரு மொழி அழிந்தால் அந்த இனம் அழியும், அவர்கள் வாழும் நாடும் பாழ்படும் என்பது நல்லறிஞர்களின் கருத்து.

கி. பயிற்று மொழி

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
மலை மேல் ஏறி வா மல்லிகைப்பூ கொண்டுவா

என்று தமிழ்நாட்டுப் பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டி மகிழ்வதுண்டு. இதே பாடலை பர்மாவிலும். மலேயாவிலும், இலங்கையிலும் பாடக் கேட்டிருக்கிறேன். எங்கு பாடினாலும் இப்பாடல் தமிழ் நாட்டுக்கே உரிய சொத்து. இதைப் போன்ற ஒரு பாடல் அமெரிக்காவிலும், இரஷ்யாவிலும் இருக்கலாம். அங்குள்ள தாய்மார்கள் அக்குழந்தைகளுக்கு இப்பாடலைச் சொல்லிக் காட்டியிருக்கலாம். அக்குழந்தைகள் நிலவை ஓடி வரச் சொல்லியும், அது வராததால் அக் குழந்தைகளே நிலவுக்குப் போய்விட்டன.

இது ஏன் என்று ஆராய்ந்த பொழுது அமெரிக்காவிலும் இரஷ்யாவிலும் உள்ள குழந்தைகளுக்கு விஞ்ஞானம் தாய்மொழியிலேயே கற்றுக் கொடுக்கப்படுகிறது. நம் நாட்டில் விஞ்ஞானம் பிற மொழிகளில் கற்றுக்