பக்கம்:மாணவர்களுக்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

மாணவர்களுக்கு

அவர்களை நன்னெறிப்படுத்த வேண்டுவது இன்றியமையாத தாகும். அவ்வகையில் மேனிலைக்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ஏற்றதொரு நூலாக அமைந்து விளங்குவது இந்நூல்.

அறிஞர் கி.ஆ. பெ. அவர்கள் தமிழ்மொழி, தமிழ் நாடு, தமிழ் மக்கள் பற்றிய எண்ணமே மூச்சாகவும், பேச்சாகவும் கொண்டவர். 1938-ஆம் ஆண்டிலிருந்தே இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி வருபவர். வானொலியில் தமிழுக்கு உரிய இடம் கிடைக்கப் போராடி 1959-இல் சிறைசென்றார். இன்றும் தமிழுக்கு இடர் நேரின் வீறுகொண்டெழும் நெஞ்சினர். அவர் தாமே முயன்று தமிழ் கற்றார்; அறிஞர் தொடர்பால் அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழைக் காக்க, வளர்க்க, நிலைப்படுத்தத் ‘தமிழர் கழகம்’ முதலான பல அமைப்புகளை நிறுவி வளர்த்தவர். இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்காக ஆற்றிய சொற்பொழிவின் எழுத்து வடிவமே இந்நூல்.

பேரறிஞர் கி.ஆ.பெ. அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் வல்லவர். தமது 22-ஆவது வயதில் மேடையேறிய அவர் இன்றுவரை ஆற்றியுள்ள பொழிவுகள் எண்ணிலடங்கா. அவர் பேசவிருக்கும் கருத்தைத் தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டுவர். சொற்பொழிவை எடுப்பு, தொகுப்பு என்ற முறையில் அழகாகத் தொடங்கி, கருத்துச் செறிவோடு, பன்னூற் புலமை வெளிப்பட, நகைச்சுவை கெழும, விளக்கக் கதைகளுடன் கூறிச் செல்லும் விசுவநாதம் அவர்கள், அதனைப் பாங்குற முடிப்பதிலும் வல்லவர்.அவரது சொல் லாற்றலுக்கு இந்நூல் சிறந்த உரைகல் எனலாம்.

"தலைப்பு "மாணவரும் தமிழும்'. பேசுகின்ற நேரம் அறுபது மணித்துளிகள். பேச்சின் கருத்து தமிழ்மொழி மிகவும் உயர்ந்தது என்பது. பேசுவதின் நோக்கம் மாணாக்கர்களாகிய நீங்கள் தமிழ்மொழியை விரும்பிப் படிக்க வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/6&oldid=1267708" இலிருந்து மீள்விக்கப்பட்டது