பக்கம்:மாணவர்களுக்கு.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

61

நிமிர்ந்து உட்கார்ந்து “தொண்டா? அதிலும் பொதுத் தொண்டா? அதுவும் இப்பையனால் செய்ய முடிகிறதா? அதைச் செய்வது மிகவும் கடினமாயிற்றே” என்று கூறி, தன் நிலையை விளக்கினார்,

“சில ஆண்டுகளுக்கு முன்பு என் அலுவலகத்திலிருந்து அரசாங்க வேலையாக 40 மைல் தொலைவிலுள்ள ஒரு ஊருக்குச் சென்றிருந்தேன். பணி முடிந்து திரும்பும் பொழுது டிரைவர், காரை ஒரு கிளைப் பாதையில் திருப்பினான். காரை நிறுத்தச் சொல்லி காரணம் கேட்டபோது, பக்கத்து ஊரில் நம் உறவினர் திருமணத்திற்குச் சென்று வெற்றிலை பாக்கு வாங்கி வரும்படி அம்மா கூறினார்கள், என்று சொன்னான். நான் உடனே அதைத் தடுத்து அலுவலகத்திற்கு வந்து, அரசாங்க வண்டியை விட்டு விட்டு, என் வண்டியை எடுத்துக் கொண்டு மறுபடியும் 35 மைலில் உள்ள அந்த திருமணத்திற்கு சென்று திரும்பினேன்” என்று பேசிக் கொண்டே தன் மேசையைத் திறந்து, வலது கையில் ஒரு பேனாவையும், இடது கையில் ஒரு பேனாவையும் எடுத்துக் கொண்டு, இது அரசாங்கத்தின் பேனா. அதிலிருக்கும் மை அரசாங்கத்தின் மை. அரசாங்கத்தின் வேலைகள் அனைத்தையும் இந்த பேனா செய்கிறது. இடது கையில் இருக்கும் இந்தப் பேனா என் சொந்தப் பேனா. உறவினர் வேலைகளையும், வீட்டு வேலைகளையும் இந்தப் பேனா செய்கிறது. இம்மாதிரி செய்ய இப்பையனால் முடியுமா?” என்று வியப்போடு கேட்டார்? உடனே கட்டிட ஒப்பந்தக்காரர் என் பக்கம் திரும்பி, கேட்டீர்களா? ‘தம்பி, என்ன சொல்கிறீர்கள் என்றார்? சர், விஸ்வேசர ஐயா அவர்களுக்கு வணக்கத்தைக் கூறி. என்னுடன் வந்த நண்பரிடம், வந்த வேலை முடிந்து விட்டது, வாருங்கள்’ என மகிழ்ச்சியோடு கூறித் திரும்பினேன். விஸ்வேசர