பக்கம்:மாணவர்களுக்கு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

63

அனைத்தும் தூய்மையானவைகளாக ஒளிவீசும், பிறருக்கும் பயன்படும்.

நல்லதையே எண்ணி, நல்லதையே சொல்லி, நல்லவைகளையே செய்கிறவர்கள், நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது தமிழ்ச் சான்றோர்களின் கருத்து. மேலும் உங்களுடைய அருமையான காலத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. பல பல பேசினேன் கேட்பதைக் கேட்டீர்கள்.அவற்றை நன்கு சிந்தித்து, அல்லன தள்ளி, நல்லன கொண்டு, நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும் நற்றொண்டு செய்து, சிறப்பெய்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என வாழ்த்துவதோடு என் சொற்பொழிவை முடித்துக் கொள்ளுகிறேன். இந்த நல்ல வாய்ப்பை எனக்கு அளித்த தலைவருக்கும், தலைமை ஆசிரியருக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களாகிய உங்சளுக்கும் என் நன்றியும், வணக்கமும் கூறுகிறேன்

ү
மாணவியருக்கு

மாணவியர்களே! உங்களை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு 'Y' என்ற எழுத்தின் நினைவே வருகிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1911-ல் அரசாங்கம் எடுத்த மக்கள் எண்ணிக்கைக் கணக்கின்படி படித்த பெண்கள் நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை. நூற்றுக்கு முக்கால். அதுவும் சரியல்ல- சரியாகச் சொன்னால், ஆயிரம் பெண்களில் படித்தவர்கள் ஏழு பேர்கள் மட்டுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/62&oldid=1435634" இலிருந்து மீள்விக்கப்பட்டது