பக்கம்:மாணவர்களுக்கு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

மாணவர்களுக்கு


கடந்த 75 ஆண்டுகளாக நல்லறிஞர்கள் பலர், பெண் கல்வி முன்னேற்றத்தைப் பற்றிப் பேசி, இன்றைக்கு நூறு பேர்களில் 15 பெண்கள் படித்திருக்கிறார்கள். இதுவும் போதாது. இன்னும் சரியாக தமிழகத்தில் பெண்கல்வி பரவ வில்லை. கட்டாயம் பரவியாக வேண்டும். -

குடும்பம் ஒரு வண்டி, சமூகம் ஒரு சாலை.வண்டியை இழுத்துச் செல்லும் மாடுகள் இரண்டும் சரிசமமாக வலிமை பெற்றிருத்தல் வேண்டும். இன்றேல் வண்டி. சாலைகளில் சரியாக ஓடாதது போலச் சமூகத்தில் குடும்பமும் சரியாக நடைபெறாது. அதிலும் ஒரு மாடு குருடாக இருக்குமானால், வண்டி எப்படி ஓடாதோ, அப்படியே சமூகத்தை நடத்திச் செல்லுகிற கணவன் மனைவிகளில் ஒருவர் கல்வி அறிவில்லாத குருடராக இருப்பாரே யானால், இல்வாழ்க்கை இனிது நடைபெறாது.

"கல்வி ஆணுக்கும் தேவை; பெண்ணுக்கும் தேவை" என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் நபிகள் நாயகம், கல்வியைக் கண்ணுக்கு ஒப்பிட்டவர் திருவள்ளுவர்.

“கண்ணுடையர் என்பவர் கற்றோர்-முகத்திாண்டு
புண்ணுடையர் கல்லாதவர்”

என்பது அவருடைய வாக்கு,

ஆண் குழந்தைகளைப் படிக்க வைப்பது போல பெண் குழந்தைகளையும் படிக்க வைத்தே ஆக வேண்டும். ஆனால் எதுவரை?... என்பது ஒரு கேள்வி. அதைத்தான் தலைப்பில் உள்ள 'Y' என்ற எழுத்து நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. உண்ணும் உணவுக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/63&oldid=1267692" இலிருந்து மீள்விக்கப்பட்டது