பக்கம்:மாணவர்களுக்கு.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. ஆ. பெ. விசுவநாதம்

67


யாக வேண்டும். அதைச் செய்வதில்லை. சும்மாவும் இருப்பதில்லை. ஏன் படிக்க வைத்தீர்? என்று மாமனாருக்கு அபராதம் போடுவது போலிருக்கிறது. இது இன்றைய நம் சமூகத்தின் கேடு.

மூன்று, நான்கு பெண்களைப் பெற்றவர்கள் எப்படியோ கடன்பட்டு, ஒரு பெண்ணை கட்டிக் கொடுத்து விடுகிறார்கள். மற்ற பெண்களுக்கு திருமணம் செய்ய முடிவதில்லை. அதன் பிறகுதான் பலர் "முதல் பெண்ணை கல்லூரியில் படிக்க வைத்தது தவறு"என்று நினைத்து, இரண்டாவது மூன்றாவது, பெண்களை உயர்நிலைப் பள்ளியோடும், மேல்நிலைப் பள்ளியோடும் நிறுத்தி விடுகிறார்கள்.

கல்லூரியில் படித்த பெண்களில் பலருக்குத் திருமணம் ஆகாமைக்குக் காரணம் வரதட்சணை மட்டுமல்ல. இன்னும் பல. அவற்றைப் பெற்றோர்கள் வாயிலாகவே கேளுங்கள்.

ஒரு நடுத்தர குடும்பத்தினர்: "என் சொத்துக்களையெல்லாம் செலவழித்துப் படிக்க வைத்து விட்டேன். திருமணம் செய்யவும், நகைகள் போடவும், சீர் வரிசை செய்யவும் என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்வேன்?"

ஒரு செல்வர் : "என் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். அதற்குரிய வசதி எனக்குண்டு. ஆனால் என்னுடைய பெண் திருமணமே வேண்டாமென்கிறாள். நான் என்ன செய்வது?" ட்டித்தவர்ை ஏமாற்றமடைந்தவர்:— "என் பெண். நல்ல பெண். உயர்நிலைப் பள்ளியில் படித்தவரை என் பேச்சைக் கேட்டுட்டித்தவர்ை