பக்கம்:மாணவர்களுக்கு.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மாணவர்களுக்கு


நடந்தாள். கல்லூரியில் படிக்கத் தொடங்கியதும் என் பேச்சைக் கேட்பதில்லை. நான் என் செய்வேன்?"

சாதி விரும்பி:"என் பெண்ணை டாக்டருக்குப் படிக்க வைத்தேன். சமூகத்தில் எங்கள் சாதியில் ஒரு மணமகனைப் பார்த்து திருமணம் பேசினேன். என் மகள் ஒப்பவில்லை. அதை நான் வற்புறுத்தினேன். திருமணத்துக்கு ஒப்புவதானால், சாதியைப் பாராமல் நான் காதலித்தவனைத்தான் மணம் புரிவேன். இன்றேல் இறந்து விடுவேன் என்று கூறுகிறாள். நான் என்ன செய்வது?”

சீர்திருத்தம் விரும்பி: "நான் பல ஆண்டுகள் சாதி, ஒழிய வேண்டுமென்று கூறிக் கொண்டிருந்தேன். ஒன்றும் நடை பெறவில்லை. இப்பொழுது கலைக்கல்லூரிகளிலும், பொறியியற் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிலும், சட்டக் கல்லூரிகளிலும், பெண்கள் படிக்க வந்த பிறகும், அலுவலகங்களில் வேலை செய்ய வந்த பிறகும், கலப்பு மணங்கள் பெருகி வருகின்றன: இது சாதி ஒழிய ஒரு நல்ல வழி. இதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். இது மேலும் பரவ வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்."

பழமை விரும்பி : பெண்கள் கல்லூரியில் கால் வைத்த உடனேயே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலிய பெண்களுக்குரிய நான்கு குணங்களும் மறையத் தொடங்கி விடுகின்றன. 16 வயது முதல் 22 வயது வரை பெண்கள் இல்வாழ்க்கைக்குப் பக்குவம் அடைந்திருக்கின்றனர். அந்தப் பக்குவம் பெற்ற பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம் செய்யாமல், ஆண் மக்களோடு சேர்த்து, மருத்துவ, பொறியியல், கலைக்கல்லூரிகளில் படிக்க வைப்பதினால், ஒழுக்கம் கெடுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டு