பக்கம்:மாணவர்களுக்கு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம்

69


விடுகின்றன. இந்த நிலையில் பையன்களிடமும், பெண்களிடமும் ஒழுக்கத்தைப் பற்றி போதிப்பது பயனற்று விடுகிறது. அது நெருப்பையும், பஞ்சையும் ஒன்றாக வைத்து, 'நெருப்பே! நீ எரிக்காதே . பஞ்சே! நீ எரியாதே!"- என்று கூறுவது போலிருக்கிறது. இது நமது பண்பாட்டுக்கு ஏற்றதல்ல.

சாதகம் விரும்பி : "எனக்கு எல்லா வசதிகளும் உண்டு. அதனால் என் மூன்று பெண்களில் ஒன்றை டாக்டராகவும், மற்றொன்றை இஞ்சினயராகவும், மற்றொன்றை எம். ஏ. பட்டம் பெறும் வரையிலும் படிக்க வைத்தேன், மூன்றுக்கும் திருமணம் ஆகவில்லை, காரணம், வந்த சாதகங்களில் பல, பெண்ணின் சாதகத்தோடு பொருந்தவில்லை. நான்கு சாதகங்கள் தான் பொருந்தின, அதில் மூன்று சாதகத்தினர் என் பெண்களின் வயதைவிட இளையவர்கள். மற்றொரு சாதகத்தில் செவ்வாய்தோசம் இருக்கிறது. எப்பொழுது என் மகள்களுக்குத் திருமணம் நடைபெறும்?"

அழகு விரும்பி : என் பெண் நல்ல அழகு. தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி படிப்புவரை அவள் படிப்பும், வயதும், உடலும் மட்டுமல்ல. அறிவும், அழகும் வளர்ந்து கொண்டே வந்தன. கல்லூரியில் படித்து, பின் டாக்டருக்குப் படித்து, தொழிலையும் நடத்திய பிறகு, அவளுக்கு வயது 27, 28 ஆயிற்று. 30க்கு மேற்பட்ட வயதுள்ள வரனைத் தேடுவது கடினமாகப் போயிற்று. 32 வயதுக்கு மேல் உள்ளவர் இரண்டாம் தாரமாகப் பெண் கேட்டார். கொடுக்க முடியவில்லை. சிலர் முதல்தாரமாகவே வந்து கேட்டார்கள். அவனுக்கு வயது 32 ஆகியும் மறறவர்கள் ஏன் பெண் கொடுக்கவில்லை? என்று சிந்திக்க வேண்டி வருகிறது. அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/68&oldid=1267742" இலிருந்து மீள்விக்கப்பட்டது