பக்கம்:மாணவர்களுக்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

7

என்பது (ப.2) என்று தொடங்குவதிலிருந்து கி.ஆ.பெ அவர்கள் எப்பேச்சையும் பகுத்தும் தொகுத்தும் கூறும் பண்பாளர் என்பது அங்கை நெல்லி.

உங்களைப் பெற்ற நாடும் வளர்த்த மொழியும் பயிற்று வித்த பள்ளியும் பெருமையடைய வேண்டும்... இந்தப் பெருமைகளைத் தேடித்தரவேண்டிய பொறுப்பு உங்களுடையது” (ப. 2, 3) என்று அப் பெருமகனார் மாணாக்கர் தம் பொறுப்பினை உணர்த்துகின்றார். “மாணாக்கன் என்ற சொல் நிறைந்த பொருளுடையது, 'மாண்புடையவர்களாக ஆக்குகின்ற பருவமே மாணாக்கர். மாணாக்கியர் என்ற பருவம் (ப. 4) என்று கூறி, மாண்புடைமைக்குக் கல்வி. ஒழுக்கம்--இவற்றின் இன்றியமையாமையை எடுத்துக் கூறுகின்றார். 'கேடில் விழுச் செல்வம்' என்று வள்ளுவரும், 'ஈடு இலாச் செல்லம்' என்று திரு. வி. க.வும் போற்றிய கல்வியின் பெருமையை, 'வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது' என்ற பழம்பாடற் கருத்தைக் ' காட்டி, குறள்நெறி நின்று விளக்குகிறார். மேலும், கல்லாமையின் இழிவை, செல்வந்தர் முன்னே வறியவன் நிற்பது காணக் கூடிய. காட்சியே; ஆனால் கற்றவர் முன்னே கல்லாதவன் நிற்பது காணச் சகியாத காட்சியாகும்” (ப. 22) என்று எதிர் மறையாக எடுத்துக்காட்டிக் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்தியுள்ளமை அவர் திறமைக்குச் சான்று.

மாணாக்கர் கல்வியுடன் ஒழுக்கத்தையும் பயில வேண்டும் என்று கி. ஆ. பெ. பலவாறு வலியுறுத்துகிறார். விழுப்பம் தரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்ற வேண்டும் என்பதை,

"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/7&oldid=1267690" இலிருந்து மீள்விக்கப்பட்டது