பக்கம்:மாணவர்களுக்கு.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ.பெ. விசுவநாதம்

71

முச்சந்திப்பில் நிற்கிறார்கள். அவர்களுக்கு வலது புறம் ஒரு பாதையும், இடதுபுறம் ஒரு பாதையும் தெரிகிறது. எந்தப் பாதையில் போவது என்பதை இப்போதே சிந்தித்தாக வேண்டும்.

இடதுபுறம் செல்ல விரும்பும் பெண்களுக்கு, கல்லூரிப் படிப்புக்கு மூன்று ஆண்டுகள் வேண்டியது போல, குடும்பக் கலையைப் படிக்கவும் மூன்று ஆண்டுகள் வேண்டும். அதாவது சமையல் செய்வது எப்படி? குடும்பத்தில் உள்ளவர்களோடு பழகுவது எப்படி? உறவினர்களோடு பழகுவது எப்படி? விருந்தினர்களை உபசரிப்பது எப்படி? பிறரோடு பேசுவதும் பழகுவதும் எப்படி? உடம்பைப் பாதுகாப்பது எப்படி? என்பதைக் கற்று அறிந்து கொள்ள முதலில் மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.

பின்பு திருமணம் ஆன பிறகு கணவனோடு வாழ்வது எப்படி? மாமியார், மாமனார், கொழுந்தனார். நாத்தனார் ஆகியவரோடு பழகுவது எப்படி? சமூகத்தில் பழகுவது எப்படி? குடும்பத்தை நடத்துவது எப்படி? வரவுக்குத் தகுந்த செலவு செய்து சிக்கனமாக வாழ்க்கை நடத்தி பொருளை மிச்சப்படுத்தும் பொருளாதாரக் கலையில் சிறந்து விளங்குவது எப்படி? என்பதை நாளடைவில் கற்றுக் கொள்ளலாம். இதற்குப் பல ஆண்டுகள் வேண்டும். அவைகளைக் கற்றுக் கொள்ள பெற்றோர்களையே ஆசிரியர்களாகக் கொள்வது நல்லது.

"நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்"

என்பது பாரதிதாசனுடைய கருத்து.

“ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக
வாழ்வோம் இந்த நாட்டிலே”