பக்கம்:மாணவர்களுக்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மாணவர்களுக்கு

இந்த சிங்கப்பூர் பேருந்து நிகழ்ச்சிதான், “ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே"- என்ற பாடலுக்குப் பொருளை விளக்கியது. அது உண்பதிலும், உரிமையிலும் தான் என்பதும், உழைப்பில் அல்ல என்பதும் தெரிகிறது. இன்றேல் பாரதியார், “சரிநிகர் சமானமாக உழைப்போம். இந்த நாட்டிலே”' என்று பாடியிருப்பார்.

இன்னும் ஒன்று. கல்லூரியில் படித்த பெண்கள் திருமணம் ஆகி இல்லறத்தை நடத்த முடியாதா? நடத்துகிறார்களே இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? என்று சிலர் கேட்கலாம். அதுவும் சிந்திக்க வேண்டிய ஒன்று தான், கல்லூரியில் படித்து வேலைக்கும் சென்று திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று வாழ்க்கை நடத்தும் மூன்று பெண்களின் வாக்கு மூலத்தைக் கேளுங்கள்,

ஒரு பட்டதாரி : ஐயா நான் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து பிழைக்கின்றேன். காலையில் எழுந்ததும் பல் துலக்க, குளிக்க, உடை உடுத்த, தலை சீவ, சில நேரங்கள் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில் கணவனுக்கு வெந்நீர் வைக்கவும், காபி கொடுக்கவும் வேண்டியிருக்கிறது. பிள்ளைகளைக் குளிப்பாட்டி அவர்களுக்கு தலைசீவி உடையுடுத்தி பள்ளிக்கு அனுப்ப வேண்டிய வேலையும், அதே நேரத்தில் செய்ய வேண்டியிருக்கிறது. காலை சிற்றுண்டி, காபி தயாரிக்கவும், சாப்பிடவும், அலுவலகத்தில் சாப்பிட பகல் உணவை. கணவனுக்கும், எனக்கும் தயாரிக்கவும். கட்டவும், அதே நேரத்தில் செய்ய வேண்டியிருக்கிறது. இத்தனையும் நான் செய்து கொண்டே, அலுவலகத்தில் நான் செய்ய வேண்டிய பணிகளின் கோப்புகளையும், படிக்கவும். குறிப்பு எடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/73&oldid=1267721" இலிருந்து மீள்விக்கப்பட்டது