பக்கம்:மாணவர்களுக்கு.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. ஆ. பெ. விசுவநாதம்

75

கவும் வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நான் படுகின்ற துன்பம் கூறி முடியாது. எனக்கு வாழ்வில் அமைதியில்லை, சாவில்தான் அமைதி கிடைக்கும் போலிருக்கிறது.

மற்றொரு பட்டதாரி : என் நாகரிக வாழ்க்கை என். மாமியார் நாத்தனார்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஒரு படித்த பெண்ணை வைத்து, குடும்பம் நடத்தும் ஆற்றல், படித்துப் பட்டம் பெறாத மாமி, நாத்திகளுக்குச் சிறிதும் இருப்பதில்லை. அதனால் நான் படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் சென்று அலுவலகத்தில் படும் துன்பங்களை விட குடும்பத்தில் படும் துன்பங்களே அதிகமாக இருக்கின்றன. என்ன செய்வது?

இன்னொரு பட்டதாரி : என் கணவர் வேலைக்குப் போய் விடுகிறார். நானும் வேலைக்குப் போய் விடுகிறேன், வேலைக்காரி தான் பிள்ளைகளை வளர்க்கிறாள். எங்களுக்கும் சோறு சமைத்துப் போடுகிறாள். இது சத்திரத்து வாழ்க்கையாக இருக்கிறதே தவிர இல்வாழ்க்கையாக இல்லை. என்ன செய்வது?

முடிவுரை : அன்புள்ள மாணவிகளே, மேலே உள்ள வைகளைப் படித்துப் பார்த்த உங்களுக்கு, கல்லூரியில் படித்து, வேலைக்கும் சென்று, பெற்றோருக்கும் பெருமை தேடித் தந்து திருமணம் செய்து குழந்தைகளையும் பெற்று, வீட்டு வேலைகளையும் செய்து அதோடு அலுவலகத்து வேலைகளைச் செய்யும் ஆற்றலும் இருக்குமானால் நீங்களும் 'Y' என்ற எழுத்தின் வலது பாதையில் நடந்து கல்லூரிக்குச் சென்று படித்துப் பட்டம் பெறலாம். அத்தகைய