பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


அப்பொழுது, பெருமானார் அவர்கள் தம்மையும் உடன் அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர்களுக்கு வயது பன்னிரண்டு.

அபூதாலிப் மறுக்காமல் பெருமானாரையும் கூட்டிக்கொண்டு வியாபாரக் கூட்டாத்தாருடன் ஷாம் தேசத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

அந்தக் கிறிஸ்துவத் துறவி வேதங்களைக் கற்று, அறிந்து, ஆராய்ந்தவர். எதிர்காலத்தில் தீர்க்கதரிசி ஒருவர் தோன்றுவார் என்பதையும் அவ்வாறு தோன்றுவதற்கான அறிகுறிகளையும், அவ்வேதங்களில் குறிப்பிட்டிருந்ததை அவர் நன்கு அறிந்திருந்தார்.

பெருமானாரிடம் அந்தத் துறவி உரையாடும் பொழுது, அவர்களுடைய முகத்தோற்றத்தையும், அறிவுக்கூர்மையையும், கனிவான சொற்களையும் கண்டு வியப்புற்றார்.

"அபூதாலிப் அவர்களே! இப் பாலகரை கவனமாகப் பார்த்துக் கொள்வீராக! இவர் அரேபியாவின் பேரொளி ஆவார்.

"அரேபியாவிலுள்ள விக்கிரக வழிபாட்டை, அடியோடு அகற்றுபவர் இவர்!