பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

படைத்த "அல்-அமீன்" "அஸ்ஸாதிக்" என்னும் பட்டங்கள் பெருமானார் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

பெருமானார் அவர்களின் பகைவர்கள் நிந்தித்து எழுதிய கவிதைகளிலும் கூடப் பெருமானார் அவர்களை "அல்அமீன்" என்றே கூறியுள்ளனர்.


10. ஏழை பங்காளர்

பெருமானார் அவர்கள் இளமைப் பருவத்திலிருந்தே பணிவும், கனிவும் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள்.

நலிவுற்றவர்கள், ஏழைகள் ஆகியோருடைய துன்பங்களைக் கேட்பதற்கு அவர்களின் காதுகள் எப்பொழுதும் தயாராயிருக்கும். உள்ளம் நெகிழ்ந்து உதவி புரிவார்கள்.

தெருவில் நடந்து போகும்பொழுது, அவர்கள் அடக்கத்தோடு நடந்து செல்வார்கள்.

அவர்கள் போகும்போது, 'உண்மையும் நேர்மையும் உடைய' 'அல் அமீன்' ‘அதோ போகிறார்கள்’ என்று சுட்டிக்காட்டி மக்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வார்கள்.