பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

அனைவரும் அக்கட்டடத்தைப் புதுப்பிக்கக் கருதி, அதன் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு குடும்பத்தார் கட்டித்தர முன் வந்தனர்; புனிதத் தலத்தைக் கட்டும் பாக்கியத்தில் எல்லா குடும்பத்தினரும் பங்கு பெறவேண்டும் என்பது அவர்கள் நோக்கம்.

அவ்வாறு பல பிரிவுகளாகக் கட்டட வேலை நிறைவேறியது.

அக்கட்டடத்தின் முக்கிய பகுதியில் 'ஹஜருல் அஸ்வத்' என்னும் கருங்கல்லை நிறுவ வேண்டிய வேலை மட்டும் எஞ்சியிருந்தது. அதை நிறுவும் பாக்கியம் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆசைப்பட்டார்கள்.

அதன் காரணமாகப் பெரிய கலவரம் நிகழ இருந்தது. அப்பொழுது முதியவர் ஒருவர், அந்தப் பிரச்சனை தீர ஒருவழி சொன்னார்.

"நாளைக் காலையில் கஃபாவின் வாசல் வழியாக முதன்முதலில் யார் வருகிறாரோ அவர் செய்யும் முடிவை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்" என்பதே அவ்வழி!