பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

அறியாதவற்றை யெல்லாம் கற்றுக் கொடுக்கிறான்.(96:1-5)

இம்மொழிகளைக் கேட்டதும் பெருமானார் அவர்களுக்கு மெய்சிலிர்த்தது. விவரிக்க இயலாத ஓர் ஆத்ம உணர்ச்சி தோன்றியது.

அவர்கள்முன் தோன்றியவர் "ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்" என்னும் பெயருடைய வானவர். அவர்கள் அவ்வப்போது பெருமானார் அவர்களுக்கு, ஆண்டவனுடைய சமூகத்திலிருந்து வெளியான தெய்வச் செய்திகளை அறிவிப்பார்கள். இவ்வாறு அறிவிக்கப்படுவது 'வஹீ’ (தெய்வீக அறிவிப்பு) என்று கூறப்படும்.

திருக்குர்ஆன் முழுவதும் இவ்வாறு பெருமானார் அவர்களுக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் ஆண்டவன் சமூகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தெய்வச் செய்திகளே ஆகும்.

முதல் முறையாக அறிவிக்கப்பட்டது திருக்குர்ஆனின் "அலக்" என்னும் அத்தியாயத்தின் துவக்கத்திலுள்ள ஐந்து திருவசனங்களாகும்.


18. துரோகியின் சூழ்ச்சி முறியடிப்பு

மக்காவாசியான உத்மான் இப்னு ஹுவரிஸ் என்பவர் கதீஜா நாச்சியாரின் நெருங்கிய