பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


அப்பொழுது பெருமானார் அர்க்கம் என்பவருடைய விசாலமான வீட்டில் இருந்தார்கள்.

துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்கள் பலர் அங்கே கூடி, தங்களுடைய வணக்கத்தை நிறைவேற்றி வந்தனர்.

அபூஜஹில் விடுத்த அறிவிப்பையும், உமர் வாளுடன் புறப்பட்டதையும் முஸ்லிம்கள் அறிந்து மிகவும் பயத்தோடு இருந்தார்கள்.

ஏனெனில், உமரின் சகோதரி வீட்டில் நிகழ்ந்தது எதுவும் எவருக்குமே தெரியாது!

உமர் வந்து, அடைக்கப்பட்டிருந்த கதவைத் தட்டினார். அப்பொழுதும் அவர் கையில் வாள் இருந்தது.

திகில் அடைந்திருந்த முஸ்லிம்கள் கதவைத் திறக்கத் தயங்கினார்கள்.

அப்பொழுது ஹம்ஸா அவர்கள் முஸ்லிம்களை நோக்கி, "உமரை உள்ளே வரவிடுங்கள். அவர் நல்ல நோக்கத்தோடு வந்தால் சரி, இல்லையானால் அவர் கையிலுள்ள வாளைக் கொண்டே, அவருடைய தலையைக் கொய்து விடுவேன்" எனத் துணிவோடு கூறினார்கள்.