பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஒன்று: அபூதாலிப் அவர்களின் மரணம், இரண்டாவது: கதீஜா பிராட்டியாரின் மரணம்.

மிகுந்த உதவியாயிருந்த இருவரின் மரணத்தினால் பெருமானார் அவர்களின் உறுதி கொஞ்சமும் தளரவில்லை.

பெருமானார் அவர்கள், பிரியமானவர்களின் பிரிவினால் உதவியற்றவர்கள் ஆனபோதிலும், ஆண்டவனிடம் அவர்களுக்கு அதிக நம்பிக்கை கூடியது.

ஆண்டவன் எப்பொழுதும் தங்களுக்கு உதவியாக இருப்பான் என்றும், அவன் செய்வது அனைத்தும் நன்மை அளிக்கத்தக்கதா யிருக்கும் என்றும் உறுதியோடு தொடர்ந்து செயல் புரியலானார்கள்.

23. எண்ணத்தில் தூய்மை - சொற்களில் உண்மை

நபிப்பட்டம் வரப்பெற்ற பத்தாவது ஆண்டு நடைபெற்ற ஹஜ்ஜுக்கு அரபு நாட்டின் பல பகுதிகளிலிருந்து திரளான மக்கள் மக்காவுக்கு வருகை புரிந்தார்கள்.

பெருமானார் அவர்கள், ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் சென்று இஸ்லாத்தைப்பற்றி அறிவுறுத்தினார்கள்.