பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பனூ ஸலீமுப்னு அவ்பு இடத்துக்கு வந்தார்கள். ஜூம்ஆத் தொழுகை நேரம் வந்துவிட்டதால், வாதீ ரானூனா என்னுமிடத்தில் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றினார்கள். மதீனாவில் அவர்கள் நடத்திய முதல் ஜூம்ஆத் தொழுகை இதுதான்.


26. மதீனாவில் பள்ளிவாசல்

பெருமானார் அவர்கள் மதீனாவுக்கு வந்து தங்கியதும், அங்கே ஒரு பள்ளிவாசலை நிறுவத் தீர்மானித்தார்கள்.

தங்களுடைய ஒட்டகம் முதன்முதலாக எந்த இடத்தில் நின்றதோ அந்த இடத்திலேயே பள்ளி வாசலைக் கட்டவேண்டும் என்பது பெருமானார் அவர்கள் விருப்பம்.

அந்த இடமானது ஸஹ்லு, ஸுஹைலு என்ற அநாதைச் சகோதரர் இருவருக்கு உரியது.

பெருமானார் அவர்களின் எண்ணத்தை அறிந்த அந்தச் சகோதரர்கள் விலை ஏதும் பெறாமலேயே இடத்தைத் தர முன்வந்தனர்.

கருணையே உருவான பெருமானார் அவர்கள், அபூபக்கர் அவர்களைக் கொண்டு