பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


சண்டைபற்றி தாங்கள் கண்ட கனவுகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள்.

‘தங்களுடைய வாளின் நுனி சிறிது முறிந்து விட்டதாகக்’ கண்டார்கள். அதன் பயனாய்த் தங்களுக்குச் சிறிது நஷ்டம் உண்டாகும் என்று விளக்கம் கூறினார்கள்.

'தங்களுடைய திருக்கரங்களை ஒரு கவசத்தில் போட்டிருப்பதாகக் கண்டார்கள் கவசமானது மதீனா என்றும், மதீனா பத்திரமான இடமாக இருப்பதால், அதற்குள் இருந்து கொண்டே சண்டை செய்யவேண்டும் என்பது கருத்து’ என்றும் கூறினார்கள்.

'சில பசுக்கள் அறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கண்டார்கள் - அதற்கு தங்களைச் சேர்ந்தவர்களில் சிலர் கொல்லப்படுவார்கள் என்று பொருள் உரைத்தார்கள்.

பெருமானார் அவர்களின் கருத்து மதீனாவுக்குள் இருந்தே தற்காப்புச் சண்டை செய்ய வேண்டும் என்பதே யாகும்.

பெண்களை அருகிலுள்ள கோட்டைகளுக்கு அனுப்பிவிட்டு, ஆண்கள் எல்லோரும் நகரில் இருந்துகொண்டே சண்டை செய்யவேண்டும்