பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


சிறிது நேரத்தில் மூர்ச்சை தெளிந்த தல்ஹா அவர்கள் அபூபக்கர் அவர்களிடம், "நாயகத்தின் நிலைமை எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்கள்.

"பெருமானார் அவர்கள் நலமாக இருக்கிறார்கள். அவர்களே என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்தார்கள்" என்று கூறினார்கள் அபூபக்கர் அவர்கள்.

அவ்வார்த்தைகளைக் கேட்டதும் தல்ஹா, "புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே. இந்த நற்செய்திக்குப் பின் எத்தகைய துன்பம் நேரிட்ட போதிலும், எனக்கு அது எளிதாகவே இருக்கும்" என்று முகமலர்ச்சியோடு கூறினார்கள்.

பெருமானாரை நோக்கி, குறைஷிகள் அம்புகளை எய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது பெருமானாரின் திருவாயிலிருந்து, "ஆண்டவனே! என்னுடைய சமூகத்தார்களை மன்னிப்பாயாக! அவர்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்" என்ற சொற்கள்தாம் வந்துகொண்டிருந்தன.

அனஸ் அவர்களின் நெருங்கிய உறவினரான அபூதல்ஹா என்பவர் தம்முடைய கேடயத்தைக்