பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

ஆனால், எதிரிகள் பல பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டு அவர் உயிர் துறக்கும்படியான பலத்த காயங்களை உண்டாக்காமல் இருந்தால், அபூஸுப்யானையும் அவர் கொன்றிருப்பார்.

பெருமானார் அவர்களின் மகளார் பாத்திமா நாச்சியார் வந்து பெருமானார் அவர்களைக் காணும்போது, அவர்களுடைய முகத்திலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. முகத்தில் அழுந்தி இருந்த கவசத்துண்டுகளை அபூஉபைதா என்பவர் தம்முடைய பற்களால் கடித்து இழுக்கவே, அத்துண்டுகள் வெளியே வந்தன. அதனால் அபூ உபைதாவின் இரண்டு பற்கள் உடைந்து விழுந்தன.

அலீ அவர்கள் கேடயத்தில் தண்ணீர் கொண்டு வந்தார்கள்.

பாத்திமா நாச்சியார் அந்தத் தண்ணீரால் கழுவியும் கூடப் பெருமானார் அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் பீறிட்டு வருவது நிற்கவில்லை.


32. போர்முனைக்கு ஓடி வந்தனர்

முஸ்லிம்களில் ஆண்களும் பெண்களும், பெருமானார் அவர்களிடத்தில், எத்தகைய