பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


குன்றின்மீது மீதி இருவர் மட்டும் இருந்தனர். அவர்கள் பகைவர் பேச்சை நம்பி கீழே இறங்கி வந்தனர். அவர்களைச் சிறைப்படுத்தி மக்காவுக்குக் கொண்டுபோய் அடிமைகளாக விற்றுவிட்டனர். அந்த இருவரில் ஒருவர் குபைப், மற்றொருவர் ஸைத்.

மேற்படி இருவரும் பத்ருப் போரின்போது மக்காவாசியான ஹாரித்-இப்னு-ஆமீரைக் கொன்றதற்குப் பழி வாங்கும் நோக்கத்தோடு ஹாரிதின் மக்கள் அவர்களை விலைக்கு வாங்கி, கொஞ்ச நாள் வைத்திருந்து பிறகு கஃபாவின் எல்லையைக் கடந்து வெளியே கொண்டு போய் வதைத்துக் கொன்று விட்டனர்.

அந்த இருவரில் ஒருவரான குபைப் வெட்டப்படுவதற்கு முன்னர், இரண்டு முறை தொழுகைக்கு அனுமதி கேட்டார். தொழுகை நிறைவேறியதும் எதிரிகளை நோக்கி, "வெகுநேரம் வரை, தொழ எனக்கு விருப்பம் உண்டு. ஆனால் நான் மரணத்துக்குப் பயந்து அவ்வாறு செய்தேன் என்று நீங்கள் நினைத்து விடக்கூடும். ஆதலால் வெகுநேரம் தொழவில்லை" என்று கூறிவிட்டு, அரபியில் ஒரு கவிதை பாடினார். அதன் கருத்து: