பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

கொண்டு நிறைவேற்றுவதற்கு எத்தனையோ பேர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நாயகம் அவர்களோ மற்றவர்களைப் போலவே கடினமான வேலைகளையும் செய்தார்கள். தங்களைப் பின்பற்றுபவர்களுக்கும் அவ்வாறே உழைத்துப் பாடுபட வேண்டும் என்பதைக் காட்டுவதற்கே அவ்வாறு செய்தார்கள்.

அவர்கள் அரசர்களுக்கெல்லாம் மேலான அரசராக இருந்தது போலவே, உழைத்து வேலை செய்வதிலும் சிறப்பான திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் அதுவும் சிறப்புமிக்க ஒரு பகுதியாக இருந்தது.

தோழர்கள் அகழ் வெட்டிக்கொண்டிருக்கும் போது கடினமான பாறை ஒன்று குறுக்கிட்டது. ஒவ்வொருவராக அதை வெட்டிப் பார்த்தார்கள். ஆனால், அதை உடைக்க இயலவில்லை. அதனால் மனம் தளர்ந்த தோழர்கள் அந்தப் பாறையை விட்டுவிட்டு, வேறு பக்கமாக வெட்டலாம் என்ற எண்ணத்தில், பெருமானார் அவர்களிடம் உத்தரவு கேட்டார்கள். பெருமானார் மற்றவர்களிடமிருந்து குந்தாலியை வாங்கி, அகழக்குள் இறங்கி நின்று அந்தப் பாறையின்