பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

என்னும் நகரத்திலுள்ள பார்ஸி தேசத்துச் சக்கரவர்த்தியான கிஸ்ராவின் அரண்மனையும், மூன்றாவதாக, ஏமன் நாட்டுத் தலைநகரான ஸன் ஆ பட்டணத்தின் அரண்மனையும் காட்டப்பட்ட தாகவும், அதே சமயம் ஜிப்ரீல் என்னும் தேவதூதர் வந்து அவர்களைப் பின்பற்றி அந்தத் தேசங்களை ஜெயிப்பார்கள் என்று அறிவித்ததாயும்” சொன்னார்கள்.

ஆனால் இம் முன்னறிவிப்பு வெளியான சந்தர்ப்பம் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கடியானதாயிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.


38. தளராத உறுதி

தங்களுடைய படைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்து குறைஷிகள் மதீனா நகரத்தின் மூன்று புறங்களைத் தாக்கினார்கள்.

ஆரம்பத்தில், முஸ்லிம் படையில் முனாபிக்குகளும் சேர்ந்திருந்தார்கள். அப்பொழுது குளிர்காலமாயிருந்தது. உணவும் போதிய அளவு கிடைக்கவில்லை. தவிர இரவில் கண் விழித்திருக்க வேண்டியதிருந்தது. மேலும் பகைவர்களின் படையோ எண்ணிக்கையில் பன்மடங்கு அதிகமாயிருப்பதையும் கண்டு