பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


ஒரு மாதம் வரை முற்றுகை நீடித்தது.

இறுதியில், யூதர்கள் பணிந்து, ஸஅத்-இப்னு-முஆத் ஏற்படுத்தும் நிபந்தனைகளை ஏற்பதாக ஒப்புக்கொண்டனர்.

குறைலா கூட்டத்தாருக்கும் ஸஅத் குடும்பத்துக்கும் வெகு காலமாக நட்பு இருந்து வந்தது. அதைக் கருதி, தங்களுக்குச் சாதகம் செய்வார் என்ற எண்ணத்தில், அவர்கள் ஏற்படுத்தும் நிபந்தனையை ஒப்புக் கொள்வதற்கு முன்வந்தனர்.

மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் யூதர்கள் துரோகம் செய்தது ஸஅத் அவர்களுக்கு அளவற்ற வருத்தத்தை அளித்தது.

ஸஅத் அவர்கள் யூதர்களுடைய வேதக் கட்டளை அனுசரித்துத் தீர்ப்பளித்தார்கள். பெருமானார் அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள்.

ஸஅத் வழங்கிய தீர்ப்பு:
1. சண்டை செய்வதற்குச் சக்தியுள்ள ஆண்களுக்கு மரண தண்டனை
2. பெண்கள், பிள்ளைகளுக்குச் சிறை தண்டனை