பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

3.பொருள்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

பெருமானார் அவர்களின் தீர்ப்பின்படி நடப்பதற்கு யூதர்கள் சம்மதித்திருந்தால், முன்னர் பனூநலீர் கூட்டத்தாருக்குச் செய்த தீர்மானப்படியே செய்திருப்பார்கள்.

(யூதர்களுடைய வேதமான தெளராத்தில், பகைவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே ஸஅத் தீர்மானித்தார்).

யூதர்களில் நானுறு பேர்கள் கொல்லப்பட்டனர். கோட்டை மதில் மீது இருந்து ஒரு பெரிய கல்லை, ஒரு முஸ்லிம் மீது போட்டுக் கொன்றதற்காக ஒரு பெண்ணும் கொல்லப்பட்டாள்.

அடுத்து, கொல்லப்பட்டவர்களில் பனூநலிர் கூட்டத்தின் தலைவர் ஹுயய்-இப்னு-அக்தப் ஒருவர். முஸ்லிம்களுடன் ஏற்பட்டிருந்த உடன்படிக்கைக்கு மாறாக, நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர்களைக் கைவிட்டு அவர்களுக்கு விரோதமாகச் சண்டை செய்யுமாறு