பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

தலைவர் துமாமா என்பவர் முஸ்லிம்களிடம் சிறைப்பட்டார்.

பெருமானார் அவர்களின் முன்னிலையில் துமாமாவைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். "உம்மை எவ்வாறு நடத்த வேண்டும்?" என்று அவரிடம் கேட்கப்பட்ட போது அவர்:

"நீங்கள் என்னைக் கொன்று விடுவதால், முஸ்லிம்களைக் கொலை செய்த ஒருவனைக் கொன்றதாகும். ஆனால், என் மீது இரக்கம் காட்டினால் அதற்காக நன்றியறிதல் உள்ள ஒருவன் மீது கருணை காட்டியதாகும்” என்றார்.

பெருமானார் அவர்கள், உடனே அவரை விடுவிக்கும்படி உத்தர விட்டார்கள்.

உடனே துமாமா அருகில் இருந்த ஊற்றில் குளித்து விட்டுப் பெருமானார் அவர்களிடம் வந்து,

"ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்லுகிறேன். நேற்றுவரை நான் உங்களை வெறுத்ததைப் போல் இவ்வுலகில் வேறு எவரையும் வெறுத்ததில்லை. ஆனால் இன்றோ உங்களுடைய முகத்தைப் போல் அவ்வளவு ஒளி மிகுந்ததாக வேறு எதுவும் எனக்குத் தோன்றவில்லை. மற்றும்,